தமிழில் ‘நன்றி’ என்பதைப் பிறமொழியில் எப்படிச் சொல்லலாம்.

தமிழில் ‘நன்றி’ என்பதைப் பிறமொழியில் எப்படிச் சொல்லலாம் என்றறிய உதவிக்குக் கூகிளைப் பாவிக்கலாம்.
இணைப்பு: https://translate.google.com/

gtranspg

இடது பக்கத்தில் தமிழ் மொழியைத் தெரிவு செய்த பின் தமிழ் மொழியில் (லதா எழுத்துரு – unicode பாவித்து) தட்டச்சுச் செய்யுங்கள். வலது பக்கத்தில் விரும்பிய மொழியைத் தெரிவு செய்து வெளியீட்டைப் பெறலாம்.

எடுத்துக் காட்டாக:
இடது பக்கத்தில் நன்றி என வழங்க வலது பக்கத்தில் ஆங்கிலத்தில் Thanks என வெளியாகியது. அதேவேளை வலது பக்கத்தில் சிங்களத்தைத் தெரிவு செய்து பார்த்த போது ස්තූතියි என வெளியாகியது. அதேவேளை வலது பக்கத்தில் ஸ்பானிஸைத் தெரிவு செய்து பார்த்த போது gracias என வெளியாகியது.

அதேவேளை வலது பக்கத்தில் பிரெஞ்சைத் தெரிவு செய்து பார்த்த போது Merci என வெளியாகியது. அதேவேளை வலது பக்கத்தில் டொச்சைத் தெரிவு செய்து பார்த்த போது dank என வெளியாகியது. அதேவேளை வலது பக்கத்தில் டணிஸ்ஸைத் தெரிவு செய்து பார்த்த போது tak என வெளியாகியது.

எம்மொழியில் வெளியீட்டைப் பெற்றாலும் அம்மொழியில் அடிப்படை அறிவு இருந்தால் மட்டுமே தெளிவாக மொழி மாற்றிப் பகிர முடியும் என்பதை முதற்பதிவிலும் குறிப்பிட்டிருந்தேன். இதுவரைத் தனிச்சொல்லை மொழி மாற்றிப் பகிர முயற்சி செய்தோம். அடுத்துவரும் பதிவில் இருசொல்களாலான வரிகளை (வசனங்களை) மொழி மாற்றிப் பகிர முயல்வோம்.

மைக்ரோசொப்ட் ஏழைக்கு உதவாது

உலகில் நாளுக்கு நாள் கணினி நுட்பம் மாறிக்கொண்டு வருகிறது. ஆனால், பல நாடுகளின் பொருண்மிய நிலை வீழ்ச்சி அடைந்து வருகிறது. அதேநேரம் மைக்ரோசொப்ட் தனது இணைய வலைச் சோதனையால் வின்டோஸ் இயங்குதள உதவியுடன் களவாகப் பயன்படுத்தும் மென்பொருள்களைச் செயலிழக்கச் செய்வது பழைய செய்தி.

இதனால், ஏழை நாடுகளில் உலாவும் ஒளித்துப் பயன்படுத்தும் மென்பொருள் பயனர்கள் திண்டாடுகின்றனர். ஏழைகளுக்கு உதவும் நோக்கில் சில கணினி நுட்பவியலாளர்களின் முயற்ச்சியால் ஒளித்துப் பயன்படுத்தும் மென்பொருள்கள் உலாவ இடமிருக்கிறது.

மைக்ரோசொப்ட்டின் புதிய வணிக நுட்பம் ஒன்றை நான் கற்றதில் இருந்து வெளிப்படுத்த முனைகின்றேன். எனது கணினியில் மைக்ரோசொப்ட் office, visual studio இரண்டுமே சிவப்பு நிறம் காட்டுகிறது. இலவச மென்பொருள்களைப் பதிவிறக்கினால் ஏழு நாட்களில் பணம் செலுத்து என்று இயங்க மறுக்கிறது.

சரி என்று அகற்றிவிட்டால், ரெஜிஸ்றிப் பதிவு நீக்கப்படாமல் கணினி ஆமை வேகத்தில் இயங்குகிறது. கூகிள் தேடலில் ரெஜிஸ்றிப் பதிவை நீக்கவும் இலவச மென்பொருள் இருப்பதாகக் காட்டுகிறது. முயன்றால் பணம் செலுத்து என்று அதுவும் எச்சரிக்கை விடுக்கிறது.

வைரஸ் மென்பொருள்காரர்களும் இப்ப பணம் பறிக்கத் தொடங்கிட்டாங்க. ஆகையால், நானும் இலவச மைக்ரோசொப்ட் அன்ரி வைரஸ் மென்பொருளைப் பாவித்த போது தான், அவர்களின் புதிய வணிக நுட்பம் ஒன்றைக் கற்றேன்.

வைரஸ் ஸ்கான் செய்த வேளை, “அன்ரி வைரஸ் கெயார்” என்ற மென்பொருள் இணைய இணைப்பினூடாகத் தன்னியக்கமாகப் பதிவிறங்கி முகத்தைக் காட்டியது. அதனைக் கையாள முற்பட்ட போது டொலர் கணக்கில் பணம் கேட்ட போது நழுவ முயன்றேன். முரண்டு பிடிக்க, இயலாக் கட்டம் windows restore point ஜப் பாவித்து அதனை நீக்கிய பின் windows automatic update ஆகாமல் பார்த்தேன். அட கடவுளே, மைக்ரோசொப்ட் இப்படியும் பணம் பறித்தால் எப்படியும் ஏழைக்கு உதவாது.

கணினி நுட்பம் மாறுதோ என்னவோ, இணைய வழிப் பணம் பறிக்கும் முறையும் மாறுகிறதே! இதற்கிடையில் வாழ்நாள் முழுவதும் இலவசப் பணியாற்றும் கட்டற்ற (open source) மென்பொருள்களே ஏழைகளுக்கு உதவும். இது பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள் பார்ப்போம்.