கூகிளில் ‘ஊற்று’ இற்கு உச்சரிப்பு ‘OOTRU’ சரியா?

கூகிள் மொழிபெயர்ப்பானில் (https://translate.google.com/) மொழிபெயர்ப்பு மட்டுமல்ல சொல்லின் உச்சரிப்பையும் அறிந்து கொள்ளலாம். நண்பர் ஒருவர் ‘ஊற்று’ இற்கு ஆங்கில உச்சரிப்பைக் கூறு என்றார். இத்தளமூடாக கூகிள் மொழிபெயர்ப்பானைப் பாவித்து மொழிபெயர்க்கலாமெனப் பதிவுகளை எழுதும் நானே, கூகிள் மொழிபெயர்ப்பானைப் பாவிக்காமல் ‘ஊற்று’ இற்கு உச்சரிப்பு ‘UTTU’ என்று சொல்லிவிட்டேன். அது பிழை, ‘UTTU’ எனின் ஊட்டு என்றாகுமென நண்பரோ அடித்துக் கூறினார். ஈற்றில் எப்படி முடிவு எடுத்தேன் என்பதை இப்பதிவில் காண்க.

‘ஊற்று’  என்ற சொல்லுக்கு ஆங்கில உச்சரிப்பு எப்படி இருக்குமென கூகிளில் அறிய முயன்றேன். படத்தில் உள்ளவாறு உச்சரிப்பைப் பார்க்க இடது பக்கப் பெட்டியின் கீழ் கவனி; உச்சரிப்பைக் கேட்க ஒலிபெருக்கியை அழுத்துக.

ootru_1

‘ஊற்று’ எனின் ‘URRU’ எனக் காட்டியது. ‘URRU’ எனின் ஊர்ரு அல்லது ஊர்று என்று தானே வருமென மீள அலசினேன்.

ootru_2

ootru_3

அவற்றிற்கும் கூகிளில் ‘URRU’ என்று தான் தென்பட்டது; ஆயினும் சில குறியீடுகள் சேர்க்கப்பட்டதால் சின்ன மாற்றம் தென்பட்டது. எனக்கோ இதுவும் தவறு என்று தான் பட்டது. உடனே நான் சொன்ன ‘ஊற்று’ இற்கு உச்சரிப்பு ‘UTTU’ சரியா எனப் படத்தில் உள்ளவாறு அலசினேன்.

ootru_4

அதற்குக் கூகிளில் ‘UTTU’ இற்கு ‘உதடு’ என்று காட்டியது. நான் ‘ஊற்று’ இற்கு உச்சரிப்பு ‘UTTU’ என்று சொல்ல கூகிளோ ‘உதடு’ என்று காட்ட என் தலை வெடித்துச் சிதறுமாப் போல இருந்திச்சு. இதேபோல படத்தில் உள்ளவாறு ‘URRU’ இற்கு என்னவென்று அலசினேன்.

ootru_5

அதற்குக் கூகிளில் ‘உற்று’ எனக் காட்டியது. எனவே ‘ஊற்று’ இற்கு ‘URRU’ என்பது பிழையென்ற முடிவுக்கு வந்தேன். அப்படியாயின் ‘ஊட்டு’ இற்கு ஆங்கில உச்சரிப்பைத் தேடினேன்.

ootru_6

‘ஊற்று’ இற்கு உச்சரிப்பு ‘UTTU’ என்று சொல்லி இருந்தேன். ‘ஊட்டு’ இற்கு ஆங்கில உச்சரிப்பு ‘UTTU’ என்று அதே கூகிள் தான் காட்டியது. அதே அந்தக் கூகிள் தான் ‘UTTU’ இற்கு ‘உதடு’ என்று காட்டியதென மேலே குறிப்பிட்டிருந்தேன். மேலும் மேலும் எனக்குத் தலையிடி அதிகமாயிற்று.

உடனே ‘ஊற்று’ இற்கு வழமையான கூகிள் தேடலில் ஆங்கில உச்சரிப்பு என்னவேன்று தேடினேன். ஆங்கே ‘ஊற்று’ இற்கு உச்சரிப்பு ‘OOTRU’ என்றவாறு பல இணையத்தளப் பெயர்களைக் காணமுடிந்தது. ஆயினும், எனக்கு நிறைவு கிட்டவில்லை. மேலும், ‘OOTRU’ என்ற சொல்லுக்கு தமிழ் உச்சரிப்பு எப்படி இருக்குமென கூகிளில் அறிய முயன்றேன்.

ootru_7

 

‘ஊற்று’ எனின் ‘URRU’ எனவும் ‘URRU’ எனின் ‘உற்று’ எனவும் காட்டிய அதே கூகிள் மொழிபெயர்ப்பான், அவ்வேளை ‘OOTRU’ என்ற சொல்லுக்கு தமிழ் உச்சரிப்பு ‘ஊற்று’ என வெளிகாட்டிற்று. ஈற்றில் பல இணையத்தளப் பெயர்கள் ‘ஊற்று’ எனின் ‘OOTRU’ எனவும் அதேவேளை ‘OOTRU’ என்ற சொல்லுக்கு தமிழ் உச்சரிப்பு ‘ஊற்று’ என்று கூகிள் மொழிபெயர்ப்பான் வெளிப்படுத்துவதாலும் ‘ஊற்று’ இற்கு ஆங்கில உச்சரிப்பு ‘OOTRU’ என்பதே சரியென முடிவுக்கு வருகிறேன்.

கொஞ்சும் அகவையில்… கெஞ்சும் அகவையில்…

சும்மா! நகைச்சுவை என்று கூகிளில் தேடிய வேளை கீழ்வரும் படத்தைக் கண்டேன்.

படத்தின் உரிமை: http://kavithaitheevu.blogspot.in/2014/01/blog-post_499.html

படத்தில் அன்றும் இன்றும் ஒருவர் சொல்வதாய் ஆங்கிலத்தில் எழுதியிருந்ததை தமிழுக்கு மாற்றித் தரலாமெனக் கூகிள் மொழிபெயர்ப்பானை (Google Translate) நாடினேன்.

gtranspg

முதலில் அன்றைய கொஞ்சல் பற்றி ஆங்கிலத்தில் (When I was a kid so many girls wanted to kiss me, I allowed) உள்ளதைத் தமிழுக்கு மாற்ற முயன்றேன்.

இடது பக்கத்தில் ஆங்கிலக் கருத்தைத் தட்டச்சுச் செய்ய, வலது பக்கத்தில் கிடைத்த தமிழைப் படியுங்க…

“நான் பல பெண்கள் என்னை முத்தமிட விரும்பினார் சிறுமியாக இருந்த போது, நான் அனுமதி” என்றவாறு கூகிள் மொழி பெயர்த்தது. ஆயினும், என் அறிவைப் பாவித்துக் கீழுள்ளவாறு திருத்தினேன்.

நான் சிறுவனாக இருந்த போது பல பெண்கள் என்னை முத்தமிட விரும்பினார், நான் அனுமதித்தேன்.

இவ்வாறே, இன்றைய கொஞ்சல் பற்றி ஆங்கிலத்தில் (But now I want to kiss so many girls, but they don’t allow. Selfish girls…) உள்ளதைத் தமிழுக்கு மாற்ற முயன்றேன்.

இடது பக்கத்தில் ஆங்கிலக் கருத்தைத் தட்டச்சுச் செய்ய, வலது பக்கத்தில் கிடைத்த தமிழைப் படியுங்க…

“ஆனால் நான் இப்போது அப்படி பல பெண்கள் முத்தம் வேண்டும், ஆனால் அவர்கள் அனுமதிக்க கூடாது.
சுயநலம் பெண்கள்” என்றவாறு கூகிள் மொழி பெயர்த்தது. ஆயினும், என் அறிவைப் பாவித்துக் கீழுள்ளவாறு திருத்தினேன்.

ஆனால் இப்போது நான் அப்படிப் பல பெண்களை முத்தமிட விரும்புகிறேன், ஆனால் அவர்கள் அனுமதிக்கவில்லை.
சுயநலமான பெண்கள்

அவரவர் கொஞ்சும் அகவையில் எப்படியோ…
எவரெவர் கெஞ்சும் அகவையில் இப்படியோ…
கூகிள் தவறாக மொழி பெயர்க்கலாம்
நான் சரியாக மொழி பெயர்த்தேனா?
“தீர்ப்பு உங்கள் கையில்…”