கூகிளில் ‘ஊற்று’ இற்கு உச்சரிப்பு ‘OOTRU’ சரியா?

கூகிள் மொழிபெயர்ப்பானில் (https://translate.google.com/) மொழிபெயர்ப்பு மட்டுமல்ல சொல்லின் உச்சரிப்பையும் அறிந்து கொள்ளலாம். நண்பர் ஒருவர் ‘ஊற்று’ இற்கு ஆங்கில உச்சரிப்பைக் கூறு என்றார். இத்தளமூடாக கூகிள் மொழிபெயர்ப்பானைப் பாவித்து மொழிபெயர்க்கலாமெனப் பதிவுகளை எழுதும் நானே, கூகிள் மொழிபெயர்ப்பானைப் பாவிக்காமல் ‘ஊற்று’ இற்கு உச்சரிப்பு ‘UTTU’ என்று சொல்லிவிட்டேன். அது பிழை, ‘UTTU’ எனின் ஊட்டு என்றாகுமென நண்பரோ அடித்துக் கூறினார். ஈற்றில் எப்படி முடிவு எடுத்தேன் என்பதை இப்பதிவில் காண்க.

‘ஊற்று’  என்ற சொல்லுக்கு ஆங்கில உச்சரிப்பு எப்படி இருக்குமென கூகிளில் அறிய முயன்றேன். படத்தில் உள்ளவாறு உச்சரிப்பைப் பார்க்க இடது பக்கப் பெட்டியின் கீழ் கவனி; உச்சரிப்பைக் கேட்க ஒலிபெருக்கியை அழுத்துக.

ootru_1

‘ஊற்று’ எனின் ‘URRU’ எனக் காட்டியது. ‘URRU’ எனின் ஊர்ரு அல்லது ஊர்று என்று தானே வருமென மீள அலசினேன்.

ootru_2

ootru_3

அவற்றிற்கும் கூகிளில் ‘URRU’ என்று தான் தென்பட்டது; ஆயினும் சில குறியீடுகள் சேர்க்கப்பட்டதால் சின்ன மாற்றம் தென்பட்டது. எனக்கோ இதுவும் தவறு என்று தான் பட்டது. உடனே நான் சொன்ன ‘ஊற்று’ இற்கு உச்சரிப்பு ‘UTTU’ சரியா எனப் படத்தில் உள்ளவாறு அலசினேன்.

ootru_4

அதற்குக் கூகிளில் ‘UTTU’ இற்கு ‘உதடு’ என்று காட்டியது. நான் ‘ஊற்று’ இற்கு உச்சரிப்பு ‘UTTU’ என்று சொல்ல கூகிளோ ‘உதடு’ என்று காட்ட என் தலை வெடித்துச் சிதறுமாப் போல இருந்திச்சு. இதேபோல படத்தில் உள்ளவாறு ‘URRU’ இற்கு என்னவென்று அலசினேன்.

ootru_5

அதற்குக் கூகிளில் ‘உற்று’ எனக் காட்டியது. எனவே ‘ஊற்று’ இற்கு ‘URRU’ என்பது பிழையென்ற முடிவுக்கு வந்தேன். அப்படியாயின் ‘ஊட்டு’ இற்கு ஆங்கில உச்சரிப்பைத் தேடினேன்.

ootru_6

‘ஊற்று’ இற்கு உச்சரிப்பு ‘UTTU’ என்று சொல்லி இருந்தேன். ‘ஊட்டு’ இற்கு ஆங்கில உச்சரிப்பு ‘UTTU’ என்று அதே கூகிள் தான் காட்டியது. அதே அந்தக் கூகிள் தான் ‘UTTU’ இற்கு ‘உதடு’ என்று காட்டியதென மேலே குறிப்பிட்டிருந்தேன். மேலும் மேலும் எனக்குத் தலையிடி அதிகமாயிற்று.

உடனே ‘ஊற்று’ இற்கு வழமையான கூகிள் தேடலில் ஆங்கில உச்சரிப்பு என்னவேன்று தேடினேன். ஆங்கே ‘ஊற்று’ இற்கு உச்சரிப்பு ‘OOTRU’ என்றவாறு பல இணையத்தளப் பெயர்களைக் காணமுடிந்தது. ஆயினும், எனக்கு நிறைவு கிட்டவில்லை. மேலும், ‘OOTRU’ என்ற சொல்லுக்கு தமிழ் உச்சரிப்பு எப்படி இருக்குமென கூகிளில் அறிய முயன்றேன்.

ootru_7

 

‘ஊற்று’ எனின் ‘URRU’ எனவும் ‘URRU’ எனின் ‘உற்று’ எனவும் காட்டிய அதே கூகிள் மொழிபெயர்ப்பான், அவ்வேளை ‘OOTRU’ என்ற சொல்லுக்கு தமிழ் உச்சரிப்பு ‘ஊற்று’ என வெளிகாட்டிற்று. ஈற்றில் பல இணையத்தளப் பெயர்கள் ‘ஊற்று’ எனின் ‘OOTRU’ எனவும் அதேவேளை ‘OOTRU’ என்ற சொல்லுக்கு தமிழ் உச்சரிப்பு ‘ஊற்று’ என்று கூகிள் மொழிபெயர்ப்பான் வெளிப்படுத்துவதாலும் ‘ஊற்று’ இற்கு ஆங்கில உச்சரிப்பு ‘OOTRU’ என்பதே சரியென முடிவுக்கு வருகிறேன்.

28 thoughts on “கூகிளில் ‘ஊற்று’ இற்கு உச்சரிப்பு ‘OOTRU’ சரியா?

 1. வணக்கம்
  அண்ணா
  ஒருசொல் பல பொருள் வித்தியாசம் மற்ற உறவுகளின் கருத்தை பார்க்கலாம்…
  காத்திருப்போம்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  Like

 2. தமிழில் உள்ள அழகும் உச்சரிப்பும் பிற மொழிகளில் (குறிப்பாக ஆங்கிலத்தில்) எந்நிலையிலும் முழுமையான சீர்மையினையோ, பொருளையோ தர முடியாது. அதுவே தமிழின் சிறப்பு. தங்களின் விவாதத்தின் அடிப்படையில் நோக்கும்போது OOTRU என்பதற்கு பதிலாக UUTRU என்பதே சரி. ஆங்கிலத்தில் தமிழினை ஒப்புநோக்கும்போது பின்வருமாறு குறில் நெடிலில் கூறப்படுகிறது. அ (a) ஆ (aa), இ (i) ஈ (ii), உ (u) ஊ (uu), ஒ (o) ஓ (oo). தவிரவும் முழுக்க முழுக்க கூகுளை நம்புவதும் தவறு என்பது என் எண்ணம். படியாக்கம் (டாலி பிறந்தது முதல் க்ளோனிங்கில் பலவகையான பிறப்புகளைப் பற்றியது) தொடர்பாக நான் ஒரு நூலை எழுதியபோது மெய்ப்பு நிலையில் தலைப்பைப் பார்த்த ஒருவர் xeroxஐப் பற்றி நல்ல நூலாக உங்கள் நூல் அமையட்டும் என்றார். இவ்வாறான குழப்பம் வரக்கூடாது என்பதற்காக நூலட்டையில் படியாக்கம் என ஆங்கிலத்தில் தலைப்பையமைத்து அதன்கீழ் (cloning) என ஆங்கிலத்திலும் பதிந்தேன். இந்நிலையில் அழகான தமிழ்ச்சொற்களுக்கான பொருத்த ஆங்கில சொல்லைத் தேடி வெற்றிபெறுவது என்பது சாத்தியமில்லை என்பதும் அதற்கான தேவை அவசியமில்லை என்றும் நான் கருதுகிறேன்.

  Like

  • “முழுக்க முழுக்க கூகுளை நம்புவதும் தவறு என்பது என் எண்ணம்.” என்ற தங்கள் கருத்தை எனது பக்கங்களில் ஏற்கனவே நினைவூட்டி உள்ளேன்.

   தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
   மிக்க நன்றி.

   Like

 3. திரு ஜம்புலிங்கம் சொல்வதை வழிமொழிகிறேன். என்றாலும் இதன் மூலம் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்திருக்கிறது.

  Like

 4. அழகான தமிழ்ச்சொற்களுக்கான பொருத்த ஆங்கில சொல்லைத் தேடி வெற்றிபெறுவது என்பது சாத்தியமில்லை

  Like

 5. Phonetic முறையில் தமிழில் டைப் செய்யும் போது URRu என்று அடித்தால்தான் சரியாகத் தமிழில் வருகிறது. இதை ஆங்கிலத்தில் மிகச் சரியாய் எழுதுவது சாத்தியமில்லை என்றே கருதுகிறேன். என்னைப் பொறுத்த வரை VOOTRU என்பதை கிட்டதட்ட சரியான வார்த்தையாகக் கொள்ளலாம். உற்று நோக்கினால், இது வூற்று என்பது போல் தோன்றினாலும், இதுவே எனக்கு சரியானதாய் படுகிறது.

  Like

 6. எங்களூரிலும் kudraalam என்கிற ஊர் உள்ளது .இதை குற்றாலம் என்றுதான் எழுத்திலும் பேச்சு வழக்கிலுமாய் சொல்கிறார்கள்,ஆனால் அப்படியே வாசிப்பின் அது குட்றாலம் என்றுதான் வரவேண்டும்.அது போலதான் இதுவும் என நினைக்கிறேன்/

  Like

 7. ootru வில் t போட்டு உச்சரிக்கும் போது ஊட்று என்றுதான் உச்சரிப்பு வரும். இது தவறானது. oortru என போட்டால் சரியாக இருக்கும் என்பது எனது கருத்து.

  Like

 8. Golden Retriever என்பது ஒரு ஜாதி நாய். நண்பர் அப்பாதுரை இதனைத் தமிழில் எழுதும் போது கோல்டென் ரெற்றீவர் என்று எழுதி இருந்தார். எனக்கு அதைத் தமிழில் ரெட்ரீவர் என்று எழுதி இருக்க வேண்டுமோ என்று தோன்றியது.ஆங்கிலத்தில் உச்சரிப்புக்கும் எழுத்துக்கும் வேறு பாடுகள் உள்ள வார்த்தைகள் நிறையவே உண்டு உ-ம் put, but, bus என்று சொல்லிக் கொண்டே போகலாம் ஊற்று எனும் தமிழ் வார்த்தை ஆங்கிலத்தில் சரியாக உச்சரிக்கப் பட வேண்டுமானால் ootru என்று எழுதுவதே சரி என்பது என் நிலைப்பாடு.

  Like

 9. uutru என்று அடிக்கும் போது அது ஊட்டு என்றுதான் வரும்… ஆங்கில எழுத்துக்களை தமிழில் டைப் செய்து ஆங்கில வார்த்தைகளைக் கண்டுபிடிப்பது என்பது கடினமான விஷயம்… OOTRU என்று அடிப்பதே சரி.

  Like

 10. பொதுவாக தமிழ் தெரியாத கூகுளிடம் போய் ஆங்கிலத்திற்கு தமிழ் அர்த்தம் கேட்பது போல் இருக்கிறது. எனது அனுபவத்தில் ஒரு ஆங்கில கட்டுரையை கூகிளிலின் மொழி பெயர்ப்பில் படிக்க முயன்றபோது தெரிந்து இருக்கும் தமிழே மறந்துவிடும் அளவிற்கு இருந்தது. அய்யா…

  Like

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.