எமது நோக்கு

ஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த பண்டிதர் இராமலிங்கம் செல்லமுத்து இணையர்களின் மூத்த மகன் காசிராசலிங்கம் அவர்களுக்கும் அதே இடத்தைச் சேர்ந்த உடையார் விநாயகமூர்த்தி வள்ளியம்மை இணையர்களின் மூத்த மகள் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.

1987 இல் இருந்து கட்டுரை, கவிதை, கதை, நகைச்சுவை, நாடகமென இலக்கியத் துறையில் எல்லாப் பகுதிகளிலும் எனது புனைவு ஆக்கங்களை எழுதி வருகின்றேன். எனது அப்பாவின் அப்பா (எனது பேரனார்) ஒரு தமிழ்ப் பண்டிதர். அவரைப் போல என்னால் தமிழ்ப் பண்டிதராக முடியவில்லை. ஆயினும் உலகெங்கும் தூயதமிழ் பரப்பிப் பேணும் பணியில் என்னை ஈடுபடுத்த விரும்பினேன். நான் அறிவில் சின்னப் பொடியன் என்றாலும் எனது எண்ணங்களை வெளிப்படுத்தி இப்பணியைத் தொடர விரும்புகிறேன்.

தமிழ்ப் பதிவுகளைப் பிறமொழிகளிலும் பகிர்வதன் மூலம் தமிழ், தமிழ் வரலாறு, தமிழர் பண்பாடு என்பவற்றை வெளிப்படுத்த முடியுமே! அதாவது, பிறமொழிக்காரர் தமிழை, தமிழர் பண்பாட்டை விரும்பவைக்க இம்முயற்சி உதவலாம் என நம்புகிறேன். இலக்கியப் படைப்புகளை மொழி மாற்றிப் பகிர எனக்கோ அறிவு இல்லை. என்றாலும் மொழி மாற்றிப் பதிய உதவிக்குக் கூகிளைப் (இணைப்பு: https://translate.google.com/) பாவிக்கலாம் என முயலவே இத்தளம் அமைத்தேன். எனது இம்முயற்சிப் பதிவுகளைப் பார்வையிட்டுப் பின்னூட்டம் மூலம் பல நுட்பங்களை எனக்கு நீங்கள் கற்றுக்கொடுக்கலாம். அதனால், இத்தளத்தின் பெயரை ‘நான் கற்றுக்கொண்டு இருக்கிறேன்’ என்று வைத்துள்ளேன்.

எனது முதலாவது பதிவு கூகிள் மொழிபெயர்ப்பான் பற்றிய குட்டி அறிமுகம் தான். இங்கே சொடுக்கி அதனைப் படிக்கவும்.
மொழி மாற்றிப் பகிர்வோம்

நானும் கணினித் துறை சார்ந்த ஒருவர் என்பதால் உலகெங்கும் தூயதமிழ் பரப்பிப் பேண உதவும் கணினித் துறை சார்ந்த பணிகளை யாழ் மென்பொருள் தீர்வுகள் (http://www.yarlsoft.com/) என்ற தளமூடாக மேற்கொண்டு வருகிறேன். எனது எல்லாச் சிறு முயற்சிகளும் வலுவற்று இருப்பினும் பிறர் உலகெங்கும் தூயதமிழ் பரப்பிப் பேண உதவுமாயின் அதுவே எனக்குப் போதும்.

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன். உங்கள் யாழ்பாவாணன்.

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s