இடம் கண்டால் மடம் கட்டிப் போடுவாங்களே!

இனிய தமிழ் உறவுகளே! இணையம் (Internet) வந்த பின்னர் பல நன்மை. தீமைகள் நிகழ்ந்து வருகின்றன. இதில் மக்களாயப் பண்பாட்டைச் சீர் கெடுக்கும் பக்கங்களே அதிகம். அவ்வாறான பக்கங்களைப் பார்வையிடத் தடுக்கும் வடிகட்டி (Filter) மென்பொருள்கள் பல இருக்கின்றன. அறிவாளிகள் என்ன சொல்கிறார்கள் என்றால் கெட்டதைத் தவிருங்கள். எதிர்பாராமல் பார்க்க நேர்ந்துவிட்டால், உடனே நல்லதுக்கு மாறுங்கள், அக்கணமே அக்கெட்டதை மறந்து விடுங்கள் என்பதை போல!

என்னமோ ஏதோ இணையம் வழியே நம்மாளுகள் நல்லன பல செய்வதனைப் பத்திரிகையில் படிக்க முடிகிறதே! இதில் என்ன இருக்கு? எல்லோருக்கும் தெரிந்த செய்தி தானே! என்று நீங்கள் கேட்கலாம். இதனால் ஒரு செய்தியை நானும் சொல்லித்தான் ஆக வேண்டும். அதாவது அள்ள, அள்ள வற்றாத அன்பளிப்புகள் (இலவசங்கள்) இணையத்தில் உலாவுகின்றன. அவற்றில் கெட்டவற்றைக் களைந்து நல்லவற்றை உறிஞ்சிப் பலர் நன்மை அடைகிறார்கள் என்றால் அது செய்திதானே!

நான் மட்டும் ஆறு வலைப்பூக்கள், வலைத்தள முகவரிகளின் தொகுப்புத் தளம், விளம்பரத் தளம் ஆக மொத்தம் எட்டு அன்பளிப்புத் (இலவசத்) தளங்களைப் பேணுகிறேன் என்றால் அவ்வளவுக்கு அவ்வளவு இணையத்தில் அன்பளிப்புகள் (இலவசங்கள்) மலிந்து இருக்கின்றன. இதெல்லாம் உங்களாலும் முடியும் தானே! “இடம் கண்டால் மடம் கட்டிப் போடுவாங்களே!” என்ற முதியோர் கருத்தைக் கேட்டிருப்பியளே… இணைய அன்பளிப்புகளை (இலவசங்களை) வைத்து பலர் பெயரும் புகழும் அடைவது செய்தியே!

இந்நிலையில் இப்படியான வளங்களைப் பாவித்துத் தத்தம் திறமைகளை நல்ல தமிழில் உலகம் எங்கும் வெளிப்படுத்த முன்வர வேண்டுமே! உங்களால் முடியும்; முயன்று பாருங்கள்! உங்களுக்கு வேண்டிய உதவிக் குறிப்புகளை கூகிளில் தேடினால் பெற்றுக் கொள்ள முடியுமே!

நானோ உங்களை விடப் படித்தறிவில், பட்டறிவில், அகவையில், ஆளுமையில் சிறியன் அப்படியிருந்தும் எனது முயற்சிகளை உங்களுடன் பகிரக் காரணம் என்னைவிட சிறப்பாக எனது முயற்சிகளை விட அதிகப்படியாக உலகம் எங்கும் நற்றமிழைப் பேண முன்வருவீர்கள் என நம்பியே!

தமிழனென்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா என்பது
அந்தக்காலம்!
தமிழனென்று சொல்லடா
இணைய வழி
தமிழன் நிலையை வெளிப்படுத்தடா என்பது
இந்தக்காலம்!

இச்செய்தியை உங்கள் நண்பர்களுக்கும் கூறித் தமிழைப் பரப்பாவிட்டாலும் பரவாயில்லை தத்தம் அறிவை ஆவது தமிழில் பரப்ப முன் வாருங்களேன்.

இது உங்கள் யாழ்ப்பாவணனின் அழைப்பு!

மைக்ரோசொப்ட் ஏழைக்கு உதவாது

உலகில் நாளுக்கு நாள் கணினி நுட்பம் மாறிக்கொண்டு வருகிறது. ஆனால், பல நாடுகளின் பொருண்மிய நிலை வீழ்ச்சி அடைந்து வருகிறது. அதேநேரம் மைக்ரோசொப்ட் தனது இணைய வலைச் சோதனையால் வின்டோஸ் இயங்குதள உதவியுடன் களவாகப் பயன்படுத்தும் மென்பொருள்களைச் செயலிழக்கச் செய்வது பழைய செய்தி.

இதனால், ஏழை நாடுகளில் உலாவும் ஒளித்துப் பயன்படுத்தும் மென்பொருள் பயனர்கள் திண்டாடுகின்றனர். ஏழைகளுக்கு உதவும் நோக்கில் சில கணினி நுட்பவியலாளர்களின் முயற்ச்சியால் ஒளித்துப் பயன்படுத்தும் மென்பொருள்கள் உலாவ இடமிருக்கிறது.

மைக்ரோசொப்ட்டின் புதிய வணிக நுட்பம் ஒன்றை நான் கற்றதில் இருந்து வெளிப்படுத்த முனைகின்றேன். எனது கணினியில் மைக்ரோசொப்ட் office, visual studio இரண்டுமே சிவப்பு நிறம் காட்டுகிறது. இலவச மென்பொருள்களைப் பதிவிறக்கினால் ஏழு நாட்களில் பணம் செலுத்து என்று இயங்க மறுக்கிறது.

சரி என்று அகற்றிவிட்டால், ரெஜிஸ்றிப் பதிவு நீக்கப்படாமல் கணினி ஆமை வேகத்தில் இயங்குகிறது. கூகிள் தேடலில் ரெஜிஸ்றிப் பதிவை நீக்கவும் இலவச மென்பொருள் இருப்பதாகக் காட்டுகிறது. முயன்றால் பணம் செலுத்து என்று அதுவும் எச்சரிக்கை விடுக்கிறது.

வைரஸ் மென்பொருள்காரர்களும் இப்ப பணம் பறிக்கத் தொடங்கிட்டாங்க. ஆகையால், நானும் இலவச மைக்ரோசொப்ட் அன்ரி வைரஸ் மென்பொருளைப் பாவித்த போது தான், அவர்களின் புதிய வணிக நுட்பம் ஒன்றைக் கற்றேன்.

வைரஸ் ஸ்கான் செய்த வேளை, “அன்ரி வைரஸ் கெயார்” என்ற மென்பொருள் இணைய இணைப்பினூடாகத் தன்னியக்கமாகப் பதிவிறங்கி முகத்தைக் காட்டியது. அதனைக் கையாள முற்பட்ட போது டொலர் கணக்கில் பணம் கேட்ட போது நழுவ முயன்றேன். முரண்டு பிடிக்க, இயலாக் கட்டம் windows restore point ஜப் பாவித்து அதனை நீக்கிய பின் windows automatic update ஆகாமல் பார்த்தேன். அட கடவுளே, மைக்ரோசொப்ட் இப்படியும் பணம் பறித்தால் எப்படியும் ஏழைக்கு உதவாது.

கணினி நுட்பம் மாறுதோ என்னவோ, இணைய வழிப் பணம் பறிக்கும் முறையும் மாறுகிறதே! இதற்கிடையில் வாழ்நாள் முழுவதும் இலவசப் பணியாற்றும் கட்டற்ற (open source) மென்பொருள்களே ஏழைகளுக்கு உதவும். இது பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள் பார்ப்போம்.