கூகிளில் ‘ஊற்று’ இற்கு உச்சரிப்பு ‘OOTRU’ சரியா?

கூகிள் மொழிபெயர்ப்பானில் (https://translate.google.com/) மொழிபெயர்ப்பு மட்டுமல்ல சொல்லின் உச்சரிப்பையும் அறிந்து கொள்ளலாம். நண்பர் ஒருவர் ‘ஊற்று’ இற்கு ஆங்கில உச்சரிப்பைக் கூறு என்றார். இத்தளமூடாக கூகிள் மொழிபெயர்ப்பானைப் பாவித்து மொழிபெயர்க்கலாமெனப் பதிவுகளை எழுதும் நானே, கூகிள் மொழிபெயர்ப்பானைப் பாவிக்காமல் ‘ஊற்று’ இற்கு உச்சரிப்பு ‘UTTU’ என்று சொல்லிவிட்டேன். அது பிழை, ‘UTTU’ எனின் ஊட்டு என்றாகுமென நண்பரோ அடித்துக் கூறினார். ஈற்றில் எப்படி முடிவு எடுத்தேன் என்பதை இப்பதிவில் காண்க.

‘ஊற்று’  என்ற சொல்லுக்கு ஆங்கில உச்சரிப்பு எப்படி இருக்குமென கூகிளில் அறிய முயன்றேன். படத்தில் உள்ளவாறு உச்சரிப்பைப் பார்க்க இடது பக்கப் பெட்டியின் கீழ் கவனி; உச்சரிப்பைக் கேட்க ஒலிபெருக்கியை அழுத்துக.

ootru_1

‘ஊற்று’ எனின் ‘URRU’ எனக் காட்டியது. ‘URRU’ எனின் ஊர்ரு அல்லது ஊர்று என்று தானே வருமென மீள அலசினேன்.

ootru_2

ootru_3

அவற்றிற்கும் கூகிளில் ‘URRU’ என்று தான் தென்பட்டது; ஆயினும் சில குறியீடுகள் சேர்க்கப்பட்டதால் சின்ன மாற்றம் தென்பட்டது. எனக்கோ இதுவும் தவறு என்று தான் பட்டது. உடனே நான் சொன்ன ‘ஊற்று’ இற்கு உச்சரிப்பு ‘UTTU’ சரியா எனப் படத்தில் உள்ளவாறு அலசினேன்.

ootru_4

அதற்குக் கூகிளில் ‘UTTU’ இற்கு ‘உதடு’ என்று காட்டியது. நான் ‘ஊற்று’ இற்கு உச்சரிப்பு ‘UTTU’ என்று சொல்ல கூகிளோ ‘உதடு’ என்று காட்ட என் தலை வெடித்துச் சிதறுமாப் போல இருந்திச்சு. இதேபோல படத்தில் உள்ளவாறு ‘URRU’ இற்கு என்னவென்று அலசினேன்.

ootru_5

அதற்குக் கூகிளில் ‘உற்று’ எனக் காட்டியது. எனவே ‘ஊற்று’ இற்கு ‘URRU’ என்பது பிழையென்ற முடிவுக்கு வந்தேன். அப்படியாயின் ‘ஊட்டு’ இற்கு ஆங்கில உச்சரிப்பைத் தேடினேன்.

ootru_6

‘ஊற்று’ இற்கு உச்சரிப்பு ‘UTTU’ என்று சொல்லி இருந்தேன். ‘ஊட்டு’ இற்கு ஆங்கில உச்சரிப்பு ‘UTTU’ என்று அதே கூகிள் தான் காட்டியது. அதே அந்தக் கூகிள் தான் ‘UTTU’ இற்கு ‘உதடு’ என்று காட்டியதென மேலே குறிப்பிட்டிருந்தேன். மேலும் மேலும் எனக்குத் தலையிடி அதிகமாயிற்று.

உடனே ‘ஊற்று’ இற்கு வழமையான கூகிள் தேடலில் ஆங்கில உச்சரிப்பு என்னவேன்று தேடினேன். ஆங்கே ‘ஊற்று’ இற்கு உச்சரிப்பு ‘OOTRU’ என்றவாறு பல இணையத்தளப் பெயர்களைக் காணமுடிந்தது. ஆயினும், எனக்கு நிறைவு கிட்டவில்லை. மேலும், ‘OOTRU’ என்ற சொல்லுக்கு தமிழ் உச்சரிப்பு எப்படி இருக்குமென கூகிளில் அறிய முயன்றேன்.

ootru_7

 

‘ஊற்று’ எனின் ‘URRU’ எனவும் ‘URRU’ எனின் ‘உற்று’ எனவும் காட்டிய அதே கூகிள் மொழிபெயர்ப்பான், அவ்வேளை ‘OOTRU’ என்ற சொல்லுக்கு தமிழ் உச்சரிப்பு ‘ஊற்று’ என வெளிகாட்டிற்று. ஈற்றில் பல இணையத்தளப் பெயர்கள் ‘ஊற்று’ எனின் ‘OOTRU’ எனவும் அதேவேளை ‘OOTRU’ என்ற சொல்லுக்கு தமிழ் உச்சரிப்பு ‘ஊற்று’ என்று கூகிள் மொழிபெயர்ப்பான் வெளிப்படுத்துவதாலும் ‘ஊற்று’ இற்கு ஆங்கில உச்சரிப்பு ‘OOTRU’ என்பதே சரியென முடிவுக்கு வருகிறேன்.

தமிழில் ‘நன்றி’ என்பதைப் பிறமொழியில் எப்படிச் சொல்லலாம்.

தமிழில் ‘நன்றி’ என்பதைப் பிறமொழியில் எப்படிச் சொல்லலாம் என்றறிய உதவிக்குக் கூகிளைப் பாவிக்கலாம்.
இணைப்பு: https://translate.google.com/

gtranspg

இடது பக்கத்தில் தமிழ் மொழியைத் தெரிவு செய்த பின் தமிழ் மொழியில் (லதா எழுத்துரு – unicode பாவித்து) தட்டச்சுச் செய்யுங்கள். வலது பக்கத்தில் விரும்பிய மொழியைத் தெரிவு செய்து வெளியீட்டைப் பெறலாம்.

எடுத்துக் காட்டாக:
இடது பக்கத்தில் நன்றி என வழங்க வலது பக்கத்தில் ஆங்கிலத்தில் Thanks என வெளியாகியது. அதேவேளை வலது பக்கத்தில் சிங்களத்தைத் தெரிவு செய்து பார்த்த போது ස්තූතියි என வெளியாகியது. அதேவேளை வலது பக்கத்தில் ஸ்பானிஸைத் தெரிவு செய்து பார்த்த போது gracias என வெளியாகியது.

அதேவேளை வலது பக்கத்தில் பிரெஞ்சைத் தெரிவு செய்து பார்த்த போது Merci என வெளியாகியது. அதேவேளை வலது பக்கத்தில் டொச்சைத் தெரிவு செய்து பார்த்த போது dank என வெளியாகியது. அதேவேளை வலது பக்கத்தில் டணிஸ்ஸைத் தெரிவு செய்து பார்த்த போது tak என வெளியாகியது.

எம்மொழியில் வெளியீட்டைப் பெற்றாலும் அம்மொழியில் அடிப்படை அறிவு இருந்தால் மட்டுமே தெளிவாக மொழி மாற்றிப் பகிர முடியும் என்பதை முதற்பதிவிலும் குறிப்பிட்டிருந்தேன். இதுவரைத் தனிச்சொல்லை மொழி மாற்றிப் பகிர முயற்சி செய்தோம். அடுத்துவரும் பதிவில் இருசொல்களாலான வரிகளை (வசனங்களை) மொழி மாற்றிப் பகிர முயல்வோம்.

மொழி மாற்றிப் பகிர்வோம்

தமிழில் உள்ள இலக்கியப் பதிவுகளை மொழி மாற்றிப் பகிர்வதனூடாக உலகெங்கும் தமிழை, தமிழ் பண்பாட்டை பரப்பிப் பேண முடியுமே!

மொழி மாற்றிப் பதிய உதவிக்குக் கூகிளைப் பாவிக்கலாம்.
இணைப்பு: https://translate.google.com/

gtranspg

இடது பக்கத்தில் தமிழ் மொழியைத் தெரிவு செய்த பின் தமிழ் மொழியில் (லதா எழுத்துரு – unicode பாவித்து) தட்டச்சுச் செய்யுங்கள். வலது பக்கத்தில் விரும்பிய மொழியைத் தெரிவு செய்து வெளியீட்டைப் பெறலாம்.

எடுத்துக் காட்டாக:
இடது பக்கத்தில் வணக்கம் என வழங்க வலது பக்கத்தில் ஆங்கிலத்தில் Greetings என வெளியாகியது. அதேவேளை வலது பக்கத்தில் சிங்களத்தைத் தெரிவு செய்து பார்த்த போது සුභ පැතුම් என வெளியாகியது. அதேவேளை வலது பக்கத்தில் ஸ்பானிஸைத் தெரிவு செய்து பார்த்த போது saludos என வெளியாகியது.

பிறிதோர் எடுத்துக் காட்டாக:
இடது பக்கத்தில் நல்வரவு என வழங்க வலது பக்கத்தில் ஆங்கிலத்தில் Welcome என வெளியாகியது. அதேவேளை வலது பக்கத்தில் சிங்களத்தைத் தெரிவு செய்து பார்த்த போது ඔබ සාදරයෙන් පිළිගනිමු என வெளியாகியது. அதேவேளை வலது பக்கத்தில் ஸ்பானிஸைத் தெரிவு செய்து பார்த்த போது bienvenida என வெளியாகியது.

எம்மொழியில் வெளியீட்டைப் பெற்றாலும் அம்மொழியில் அடிப்படை அறிவு இருந்தால் மட்டுமே தெளிவாக மொழி மாற்றிப் பகிர முடியும் என்பதை மறக்க வேண்டாம். உங்களால் இயன்ற வரை மொழி மாற்றிப் பகிர முயற்சி செய்யலாம். வெளியீட்டுக்காக இல்லாவிட்டாலும் உங்கள் பல மொழி ஆற்றலைப் பெருக்கவும் இது உதவுமென நம்புகிறேன்.