மொழி மாற்றிப் பகிர முயலு

நாளொரு வண்ணம் பொழுதொரு எண்ணம் நம்மாளுக்கு ஏற்படக் கணினி நுட்பங்களும் நாளுக்கு நாள் மாற்றம் பெறுகிறதே! சொல் திருத்தி, இலக்கணத் திருத்தி உள்ளது போல இன்று மொழி மாற்றித் தெரிவி (மொழி பெயர்ப்பான் – Translator) நுழைந்துவிட்டது.

நான் பார்த்ததிலே மைக்கிரோசொப்ட் (https://www.bing.com/translator/) ஐ விட கூகிள் (https://translate.google.com/) மொழி மாற்றியிலே அதிக மொழிகளில் மாற்றீடு செய்யும் வசதியுண்டு. எனவே, கூகிள் மொழி மாற்றியிலேயே நாமும் மொழி மாற்றிப் பகிர முயலுவோம்.

கீழ் வரும் இணைப்பைச் சொடுக்கிக் கூகிள் மொழி மாற்றியைப் பாருங்கள்
https://translate.google.com/

gtranspg

இத்தளத்தில் “வணக்கம்” என்ற சொல்லை ஆங்கிலம், சிங்களம் மொழிகளில் மொழி மாற்றிப் பகிர முயலுவோம். இதே போன்று உங்களுக்குத் தெரிந்த அத்தனை மொழிகளிலும் மொழி மாற்றிப் பகிர  முயற்சி செய்யுங்கள்.

கூகிள் மொழி மாற்றியில் இடது பக்கத்தில் தமிழ் மொழியைத் தெரிவு செய்யுங்கள். பின் “வணக்கம்” என்பதை உள்ளீடு செய்யுங்கள். அதே நேரம் வலது பக்கத்தில் ஆங்கில மொழியைத் தெரிவு செய்யுங்கள். பின் நீல நிற Translate அழுத்தியை அழுத்தினால் மொழி மாற்றப்பட்டுவிடும். கீழுள்ள படத்தைப் பார்த்துப் புரிந்து கொள்ளுங்கள்.

tamil-1

இவ்வாறே வலது பக்கத்தில் சிங்கள மொழியைத் தெரிவு செய்திருந்தால் கீழுள்ள படத்தில் உள்ளவாறு இருக்கும்.

tamil-2

இவ்வாறு மொழி மாற்றும் வேளை எடுத்துக்காட்டிற்கு இடது புறப் பெட்டியில் ஆங்கிலத்தில் தட்டச்சுச் செய்த பின் வலது புறப் பெட்டியில் தோன்றும் பிறமொழிச் சொல்லின் மேல் இடது சுட்டெலி அழுத்தியைச் சொடுக்கினால் பிற சொல்கள் தோன்றும். அதில் சரியான சொல்லைத் தெரிவு செய்யலாம். அதற்குக் கூட அம்மொழி பற்றிய தெளிவு இருந்திருக்க வேண்டும்.

மேலுள்ள எடுத்துக்காட்டுகளைப் படித்தால் மொழிபெயர்ப்பில் தவறு இருப்பதாகத் தெரிகிறது. அதாவது நம்மூரில் “வணக்கம்” என்றால் ஆங்கிலத்தில் வெல்கம் என்றும் சிங்களத்தில் ஆயுபோவன் என்றும் கூறுவார்கள். கீழுள்ள படத்தைப் பாருங்கள்.

vanakkam

உங்கள் அறிவுக்கு எட்டிய வகையில் தவறு எங்கே உள்ளது என்பதைக் கண்டுபிடியுங்கள். ஆங்கிலத்தில் வெல்கம் என்றால் தமிழில் என்னவென்று கீழுள்ள படம் வெளிக்காட்டும்.

english

அதவேளை சிங்களத்தில் ஆயுபோவன் என்றால் தமிழில் என்னவென்று கீழுள்ள படம் வெளிக்காட்டும்.

sinhala

 

அடடே சிங்களத்தில் ஆயுபோவன் என்றால் தமிழில் ‘வரவேற்கிறோம்’ என்று வெளிப்படுத்தி நிற்கிறதே! இதிலிருந்து என்ன முடிவுக்கு வருகிறீர்கள்.

  1. எந்தவொரு மொழி பெயர்ப்பானையும் நம்ப இயலாது. காரணம் சொல்வளம் மற்றும் தொழில்நுட்பச் சிக்கல் இருக்கலாம்.
  2. எந்தவொரு மொழியிலும் மொழி மாற்றிப் பகிர முயல்வோருக்கு அந்தந்த மொழியில் அடிப்படை அறிவு இருக்க வேண்டும்.
  3. ஊர் வழக்கில், பேச்சு வழக்கில் அந்தந்த மொழிச் சொல்கள் பாவனை பற்றித் தெரிந்திருக்க வேண்டும்.
  4. கூகிள் மொழி பெயர்ப்பானில் மொழி மாற்றிப் பகிர முயன்றாலும் தத்தம் மொழி ஆளுமையைக் கையாண்டு சிறப்பாக மொழி மாற்றிப் பகிர இயலும்.
  5. கூகிள் மொழி பெயர்ப்பான் மொழி மாற்றிப் பகிர உதவுமே தவிர, நம்பிக்கை வைக்க இயலாது.

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன். உங்கள் யாழ்பாவாணன்.

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s