யாழ் மென்பொருள் தீர்வுகள்

எனது தொடக்க காலம் தனியார் கல்வி நிறுவனங்களில் கணித பாடம் கற்பிப்பதாக இருந்தது. பின்னர் கணினித் துறையில் பணியாற்றினேன். கணினி நுட்பங்கள் ஊடாகத் தமிழை உலகம் எங்கும் பரப்பிப் பேண யாழ் மென்பொருள் தீர்வுகள் (Yarlsoft Solutions) என்ற தலைப்பின் கீழ் வீட்டிலிருந்தவாறே பணியாற்றுகிறேன். எனது கணினி நுட்ப வெளியீடுகளை http://www.yarlsoft.com/ தளமூடாக வெளியிடலாமென விரும்புகின்றேன்.

இணையத் தளங்கள் ஊடாக எத்தனையோ நுட்பங்கள் அறிமுகமாகின்றன. அதில் ஒன்று தான் மொழிபெயர்ப்பான் (Translator) நுட்பம் என்பதை நீங்களும் அறிவீர்கள். எனது இலக்கியப் பதிவுகளை வெளியிட வலைப்பூக்களை (Blogs) நடாத்தும் அதேவேளை மொழிமாற்றிப் பகிர்தலின் தேவையை இத்தளத்தில் அறிமுகம் செய்ய விரும்புகின்றேன்.

மேலும் வலைத்தள, கணினி நுட்பத் தகவல், கணினி மென்பொருள், கணினி நிறுவனத் தகவல் போன்றனவும் இத்தளத்தில் பகிரலாமென விரும்புகின்றேன். தமிழ் வழியே தமிழ் மென்பொருள், தமிழ் வலைத்தளச் செயலி, மற்றும் உலகம் எங்கும் தமிழைப் பரப்பிப் பேண உதவும் கணினி நுட்பங்களையும் இங்கு பகிருவதனால் அறிஞர்களின் மதியுரைகளைப் பெற்று பயன்தரும் வெளியீடுகளை http://www.yarlsoft.com/ தளமூடாக முன்வைக்கலாமென நம்புகின்றேன்.

எதுவும் யாழ்பாவாணனின் தனி முயற்சியாக இருக்க வாய்ப்பில்லை. யாழ்பாவாணனின் மாணவர்களும் இணைந்து செய்ததாகவோ நட்புடன் அறிஞர்களும் இணைந்து செய்ததாகவோ இருக்கலாம். கணினி நுட்பங்களைப் பாவித்து உலகம் எங்கும் தமிழைப் பரப்பிப் பேண உதவும் எல்லோரையும் இணைத்துச் செயலாற்ற விரும்புகிறேன். அவ்வாறானவர்களுக்கு எனது இலவசப் பணிகளை http://www.yarlsoft.com/ தளமூடாக வழங்குகிறேன்.

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன். உங்கள் யாழ்பாவாணன்.

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s